பரிதிமாற் கலைஞர்
பிறப்பு:
· சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தம் பெயரைப் பரிதிமாற்கலைஞர் எனத் தனித்தமிழாக்கிக் கொண்டவர்.
· மதுரை அடுத்த விளாச்சேரியில் பிறந்தார்.
· பெற்றோர் - கோவிந்தசிவனார், இலட்சுமி அம்மாள்.
· தம் பெற்றோருக்கு மூன்றாவது மகனாக, 1870ஆம் ஆண்டு சூலைத் திங்கள் ஆறாம் நாள் பிறந்தார்.
கல்வி:
· தந்தை கோவிந்த சிவனாரிடமே வடமொழி பயின்றார்.
· மகாவித்துவான் சபபதியாரிடம் தமிழ் பயின்றார்.
· சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை பயின்றார்.
· இளங்கலை தேர்வில் தமிழிலும் தத்துவத்திலும் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார்.
இயற்றமிழ் மாணவர்:
· தமிழ் பயிலும் ஆர்வம் மிக்க மாணவர்களுக்குத் தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன், அவர்களை ”இயற்றமிழ் மாணவர் ” எனப் பெயரிட்டு அழைத்தார்.
மதுரைச் தமிழ்ச்சங்கம்:
· மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ முயன்றவர்களுள் இவரும் ஒருவர்.
· பாசுகரசேதுபதி தலைமையில் பாண்டித்துரை தேவர் மேற்பார்வையில் பரிதிமாற்கலைஞர், உ.வே.சாமிநாதர், இராகவனார் ஆகிய பேராசிரியர்களின் துணையோடு மதுரைத் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது.
திராவிட சாஸ்திரி:
· யாழ்பாணம் சி.வை.தாமோதரனார், பரிதிமாற்கலைஞரின் தமிழ்ப் புலமையும் கவிபாடும் திறனையும் கண்டு, ”திராவிட சாஸ்திரி ” என்னும் சிறப்புப் பட்டதை வழங்கினார்.
தனிப்பாசுரத்தொகை:
· பரிதிமாற்கலைஞர், தாம் இயற்றிய ”தனிப்பாசுரத்தொகை ” என்னும் நூலில் பெற்றோர் இட்ட சூரியநாராயண சாஸ்திரி என்ற வடமொழிப் பெயரை மாற்றிப் பரிதிமாற்கலைஞர் எனத் தனித்தமிழ்ப் பெயரைச் சூட்டிக்கொண்டார்.
· இந்நூலினை, ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
கம்பராமாயண உவமை:
· பரிதிமாற் கலைஞர் சென்னைக் கிறித்துவ கல்லூரியில் படித்த பொது நடந்த நிகழ்வு.
· கல்லூரி முதல்வரும் ஆங்கிலப் பேராசிரியருமான வில்லியம் மில்லர் என்பவர் டென்னிசன் இயற்றிய ”ஆர்தரின் இறுதி ” வ்ன்னும் நூலில் இருந்து ஒரு பாடலி சொல்லி அதில் படகின் துடுப்பு அன்னப்பறவைக்கு உவமையாக கூறப்பட்டது.
· தமிழில் இது போன்ற உவமைகள் உண்டா என அவர் கேட்க, பரிதிமாற் கலைஞர் கம்பராமாயண குகப்படலத்தில் உள்ள ”விடுநனி கடிது ” என்னும் பாடலை பாடி பொருள் கூறினார்.
தமிழின் சிறப்பை உணர்த்தல்:
· வடமொழியும் தமிழ்மொழியும் கலந்து எழுதுதல் என்பது, தமிழ்மணியோடு பவளத்தைப்போலச் செந்நிறம் உடையதான மிளகாய்ப் பலம் கலந்தது போன்ற பயனையே தந்தது என்பது பரிதிமாற்கலைஞரின் கருத்து.
· தமிழ்த்தாயின் எழில் மிகுந்த உடலுக்கு, மனிபிரவாள நடை எரிச்சலைத் தான் தரும் என்பதனை உணர்ந்த பரிதிமாற் கலைஞர், வடசொல் கலப்பைக் கண்டித்தார்.
தமிழ்த்தொண்டு:
· பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் தமிழை விலக்கி வடமொழியை கொண்டு வர முடிவுசெய்யப்பட்டது.
· ஆனால் பரிதிமாற் கலைஞரின் உறுதியான எதிர்பால் பல்கலைக்கழகம் அம்முடிவை கைவிட்டது.
படைப்புகள்:
· “ரூபாவாதி, கலாவதி ” முதலிய நற்றமிழ் நாடகங்களை இயற்றினார்.
· அவர் ரூபாவதி, கலாவதி என்னும் பெண்பால் வேடங்களும் புனைந்து நடித்தார்.
· “சித்திரக்கவி ” என்னும் நூலைப் படைத்தார்.
· குமரகுருபரரின் ”நீதிநெறிவிளக்கம் ” நூலில் இருந்து 51 பாடல்களுக்கு உரை எழுதியுள்ளார்.
இதழ்ப் பணி:
· மு.சி.பூர்ணலிங்கம் தொடங்கி வைத்த :ஞானபோதினி ” என்னும் இதழைப் பரிதிமாற் கலைஞர் நடத்தினார்.
· மும்மொழிப் புலமை உடையவர்.
· மதுரைத் தமிழ்ச்சங்கத்தாரின் ”செந்தமிழ் ” இதழில் உயர்தனிச் செம்மொழி என்னும் தலைப்பில், தமிழின் அருமை பெருமைகளை விளக்கி அரியதொரு கட்டுரை வரைந்தார்.
· தமிழ்மொழி ”உயர்தனிச் செம்மொழி ” என முதன்முதலாக நிலைநாட்டினார்.
மறைவு:
· தமிழ் உள்ளங்கொண்டு அயராது தமிழ்த் தொண்டாற்றிய பரிதிமாற்கலைஞர் தமது 33 அகவையில் இயற்கை எய்தினார்.
· நடுவண் அரசு பரிதிமாற்கலைஞர்க்கு அஞ்சல்தலை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.