ஏலாதி
சொற்பொருள்:
· வணங்கி – பணிந்து
· மாண்டார் – மாண்புடைய சான்றோர்
· நுணங்கிய நூல் – நுண்ணறிவு நூல்கள்
· நோக்கி – ஆராய்ந்து
இலக்கணக்குறிப்பு:
· நூல்நோக்கி – இரண்டாம் வேற்றுமைத்தொகை
· பலியில்லா மன்னன் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
பிரித்தறிதல்:
· வழியொழுகி - வழி + ஒழுகி
ஆசிரியர் குறிப்பு:
· ஏலாதியை இயற்றியவர் கணிமேதாவியார்.
· இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.
· காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு.
· இவர், திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.
நூல் குறிப்பு:
· இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
· இந்நூல் சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட 81 வெண்பாக்களைக் கொண்டுள்ளது.
· ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றால் ஆன மருந்துக்கு ஏலாதி எனப் பெயர்.