திருக்குறள்
சொற்பொருள்:
· விழுப்பம் – சிறப்பு
· ஓம்பப்படும் – காத்தல் வேண்டும்
· பரிந்து – விரும்பி
· தேரினும் – ஆராய்ந்து பார்த்தாலும்
· குடிமை – உயர்குடி
· இழுக்கம் – ஒழுக்கம் இல்லாதவர்
· அழுக்காறு – பொறாமை
· ஆகம் – செல்வம்
· ஏதம் – குற்றம்
· எய்துவர் – அடைவர்
· இடும்பை – துன்பம்
· வித்து – விதை
· ஒல்லாவே – இயலாவே
· ஓட்ட – பொருந்த
· ஒழுகல் – நடத்தல்
· கூகை – கோட்டான்
· இகல் – பகை
· திரு – செல்வம்
· தீராமை – நீங்காமை
· பொருதகர் – ஆட்டுக்கடா
· சேருவர் – பகைவர்
· சுமக்க – பனிக
· கிழக்காந்தலை – தலைகீழ்(மாற்றம்)
· எய்தற்கு – கிடைத்தற்கு
· கூம்பும் – வாய்ப்பற்ற
இலக்கணக்குறிப்பு:
· ஒழுக்கம் – தொழிற்பெயர்
· காக்க – வியங்கோள் வினைமுற்று
· பரிந்து, தெரிந்து – வினையெச்சம்
· இழிந்த பிறப்பு – பெயரெச்சம்
· கொளல் – அல் ஈற்றுத் தொழிற்பெயர்
· உடையான் – வினையாலணையும் பெயர்
· உரவோர் – வினையாலணையும் பெயர்
· எய்தாப் பழி – ஈறு கேட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
· நல்லொழுக்கம் – பண்புத்தொகை
· சொலல் – தொழிற்பெயர்
· அருவினை – பண்புத்தொகை
· அறிந்து – வினையெச்சம்
ஆசிரியர் குறிப்பு:
· திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
· தமிழுலகம் இவரை முதற்பாவலர், தெய்வப்புலவர், செந்நாப்போதார், பொய்யில்புலவர், பெருநாவலர் முதலிய பெயர்களால் போற்றுகின்றது.
· பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் பொது நெறி காட்டியவர்.
· இவரின் காலம் கி.மு.31ஆம் நூற்றாண்டு என்பர்.
· தமிழக அரசு தைத் திங்கள் இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாளாக அறிவித்து கொண்டாடுகிறது.
நூல் குறிப்பு:
· திரு + குறள் - திருக்குறள்
· உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது.
· இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
· அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலாகவும், ஒன்பது இயல்களையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டது.
· “வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகம் ” என்றும், ”இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே ” என்றும் பாவேந்தர் போற்றுகின்றார்.
· மலையத்துவாசன் மகன் ஞானப்பிரகாசம் 1812இல் திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து தஞ்சையில் வெளியிட்டார்.