கடவுள் வாழ்த்து
|
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பிஉள்ளம் பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றிஎன்னும் கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக் கண்டுகொள்ளே - மாணிக்கவாசகர் |
சொற்பொருள்:
· மெய் –உடல்
· விதிவிதிர்த்து – உடல் சிலிர்த்து
· விரை – மணம்
· நெகிழ – தளர
· ததும்பி – பெருகி
· கழல் – ஆண்கள் காலில் அணியும் அணிகலன்
· சயசய – வெல்க வெல்க
இலக்கணக்குறிப்பு:
· விடேன் – தன்மை ஒருமை வினைமுற்று
ஆசிரியர் குறிப்பு:
· சைவ சமயக்குரவர் நால்வரில் ஒருவர்.
· திருவாதவூரில் பிறந்தவர். இவ்வூர் மதுரைக்கு அருகில் உள்ளது.
· இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக பனிப் புரிந்தார்.
· திருப்பெருந்துறை இறைவனால் ஆட்கொள்ளப் பெற்றவர்.
· இவரை ”அலுத்து அடியடைந்த அன்பர் ” என்பர்.
· திருவாசகமும் திருகொவையாரும் இவர் அருளியவை.
· இவர் எழுப்பிய கோவில், தற்போது ”ஆவுடையார் கோவில் ” என வழங்கப்படும் திருப்பெருந்துறையில் (புதுகோட்டை மாவட்டம்) உள்ளது.
நூல் குறிப்பு:
· சைவத் திருமுறைகளில் எட்டாவது திருமுறை இவரின் திருவாசகமும் திருகொவையாரும் ஆகும்.
· திருவாசகத்தில் 658 பாடல்கள் உள்ளன.
· திருவாசகத்தை சிறப்பிக்க, ”திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் ” என்னும் தொடர் வழங்கலாயிற்று.
· திருவாசகத்தை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
· சதகம் என்பது நூறு பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்.
ஜி.யு.போப்:
· உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனதை கவர்கின்றவர் யாரும் இல்லை ” என்கிறார் ஜி.யு.போப்.