பாம்புகள்
இது 6ஆம் வகுப்பு தமிழ் பாடத்தின் துணைப்பாடம் ஆகும். அமுதா மற்றும் செழியன் என்ற அண்ணன்-தங்கை இடையே நடக்கும் உரையாடல் வழியாக பாம்புகளைப் பற்றிய அறிவியல் உண்மைகள் சுவாரஸ்யமாக விளக்கப்படுகின்றன.
பாம்புகளின் வகைகள்
- உலகம் முழுக்க ஈராயிரத்து எழுநூற்று ஐம்பது வகை (2,750) பாம்புகள் இருக்கின்றன.
- இந்தியாவில் மட்டும் இருநூற்று நாற்பத்து நான்கு வகை (244) பாம்புகள் இருக்கின்றன.
- பாம்பு வகைகளில் ஐம்பத்திரண்டு வகை மட்டுமே நச்சுத்தன்மை உடையவை.
இராஜ நாகம்
- இந்தியாவில் உள்ள இராஜ நாகம் உலகிலேயே நஞ்சுமிக்க மிக நீளமான பாம்பு.
- இது 15 அடி நீளம் உடையது.
- கூடு கட்டி வாழும் ஒரே வகை பாம்பு இது.
- இராஜ நாகம் மற்ற பாம்புகளையும்கூட உணவாக்கிக் கொள்ளும்.
பாம்புகளின் உடல் அமைப்பு
- பாம்புகள் ஊர்வன வகையைச் சார்ந்தவை.
- பெரும்பாலான பாம்புகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பன. சில பாம்புகள் மட்டும் குட்டிபோடும்.
- பாம்புகளின் பற்கள் உள்நோக்கி வளைந்திருக்கும். இரையை பிடித்தால் தப்பிட முடியாது.
- பாம்புகள் இரையை மென்று தின்பதில்லை — அப்படியே விழுங்கிவிடுகின்றன.
- பாம்பு விழுங்குகிற எலி, தவளைகள் உடம்பில் உள்ள நீர்ச்சத்தே அதற்குப் போதும் — பாம்பு பால் குடிக்காது.
பாம்புக்கு காது உண்டா?
- பாம்புக்குக் காது அவ்வளவாக வளர்ச்சி அடையவில்லை.
- காற்றில் வரும் ஓசைகளை பாம்பினால் கேட்க இயலாது.
- தரையில் ஏற்படும் அதிர்வுகளை உணர்ந்து, அதன் மூலம் பாம்பு முன்னெச்சரிக்கையாக இருக்கிறது.
பாம்பு நாகசுரம் ஓசைக்கு ஆடுகிறதா?
- பாம்பு மகுடி இசைக்கு ஆடவில்லை.
- மகுடி வாசிக்கிறவரைக் கண்ணால் பார்க்கிறது. மகுடி அசைவதனைப் போலப் பாம்பும் அதனைப் பார்த்து அசைந்தாடுகிறது.
பாம்பு நஞ்சின் பயன்
- பாம்பு தன் இரையைக் கொல்லவும், செரிப்பதற்காகவும் தன்னுடைய பற்களில் நஞ்சு வைத்திருக்கிறது.
- நல்லபாம்பின் நஞ்சிலிருந்து கோப்ராக்சின் (Cobrozin) என்னும் வலிநீக்கி மருந்து தயாரிக்கப்படுகிறது.
பாம்பு — உழவர்களின் நண்பன்
- வயலில் உள்ள பயிர்களை எலிகள் அழிக்கின்றன.
- எலிகளை அழிப்பதில் பாம்புகளுக்குப் பெரும் பங்கு உண்டு.
- எனவே பாம்புகள் உழவர்களின் நண்பர்கள் என்று கூறுவர்.
தவறான நம்பிக்கைகள்
- பாம்பு யாரையும் தேடிப்போய்க் கடிப்பது இல்லை. மனிதர்களால் தனக்கு ஏதாவது இடையூறு ஏற்பட்டால்தான் கடிக்கும்.
- பாம்புக்கடியினால் இறந்தவர்களைவிட, அச்சத்திலும் அதிர்ச்சியிலும் இறந்தவர்களே மிகுதி.
- ஒரு பாம்பைக் கொன்றால் அதன் இணைப் பாம்பு பழிவாங்கும் என்று சொல்வது உண்மையல்று.
- நல்ல பாம்பின் தலையில் மாணிக்கக் கற்கள் வைத்திருக்கிறது என்று சொல்வது வெறும் கட்டுக்கதை.
பாம்புக்கடிக்கு முதலுதவி
- பாம்பு கடித்தவுடன் கடிபட்ட இடத்தை அசையாமல் வைத்துக்கொள்ளுதல் வேண்டும்.
- கடிபட்ட இடத்திற்கு மேல் உடனடியாகக் கட்டுப்போட்டு பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் செல்லுதல் வேண்டும்.
- நச்சுமுறிவு மருந்து கொடுத்தல் வேண்டும். இதுவே முறையான முதலுதவி.
- முதலில் பாம்பைக் கண்டாலே அடித்துக் கொல்லவேண்டும் என்று நினைக்கவே கூடாது.
- பாம்பும் ஓர் உயிர்தான் என்று புரிந்துகொள்ளுதல் வேண்டும்.
பாம்புப் பாதுகாப்புச் சட்டம்
- தோலுக்காகப் பாம்புகள் கொல்லப்படுவதைத் தடுக்க, இந்திய அரசு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972 இன்படி, சட்டம் நிறைவேற்றி உள்ளது.