இராமலிங்க அடிகள்
வாழ்த்து – திருவருட்பா
கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான் – பண்ணில்
கலந்தான்என் பாட்டில் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து.
பாடல்பொருள்
கருணை நிறைந்த இறைவன் என் கண்ணில் இருக்கிறான்; என் சிந்தனையில் கலந்து இருக்கிறான்; என் எண்ணத்தில் கலந்து இருக்கிறான்; என் பாட்டில் கலந்து இருக்கிறான்; பாட்டின் இசையில் கலந்து இருக்கிறான்; அவன், என் உயிரில் கலந்து இருக்கிறான்.
கோடிட்ட இடங்களை நிரப்புக
- இராமலிங்க அடிகளார் மருதூர் என்னும் ஊரில் பிறந்தார்.
- இராமலிங்க அடிகளாரது பாடல்கள் திருவருட்பா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
குறுவினாக்கள்
- யாரை நாம் வள்ளலார் என அழைக்கிறோம்?
இராமலிங்க அடிகளாரை நாம் வள்ளலார் என அழைக்கிறோம். அவரது சிறப்புப் பெயர் திருவருட்பிரகாச வள்ளலார் என்பதாகும். - இராமலிங்க அடிகளார் எழுதிய உரைநடை நூல்கள் யாவை?
ஜீவகாருண்யஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம் என்னும் நூல்கள் இவர் எழுதியவை.
சிறுவினாக்கள்
- இறைவன் எங்கெங்கு இருப்பதாக இராமலிங்க அடிகளார் கூறுகிறார்?
கருணை நிறைந்த இறைவன் என் கண்ணில், சிந்தனையில், எண்ணத்தில், பாட்டில், பாட்டின் இசையில், உயிரிலும் கலந்திருக்கிறான் என்று இராமலிங்க அடிகளார் கூறுகிறார்.